Advertisment

Surya 38: ’சூரரைப் போற்று’ம் சூர்யா!

காப்பான் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suriya 38, நடிகர் சூர்யா

Surya 38 Title: நடிகர் சூர்யா தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisment

செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே, கே.வி.ஆனந்தின் காப்பான், இறுதி சுற்று சுதா கொங்கராவின் புதிய படம் ஆகியப் படங்கள் தற்போது அவரின் கைவசம் உள்ளது.

இதில் சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அவரது திரை வாழ்க்கையில் 38-வது படமாகும்.

இதில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இதன் படபிடிப்பு சென்னையில் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் படத்திற்கு ‘சூரரைப் போற்று’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தவிர, காப்பான் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது. என்.ஜி.கே மே 31-ம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் ரிலீஸாவதால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

Tamil Cinema Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment