scorecardresearch

ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் ரிலீஸ்: ஜெய் பீம் ஏமாற்றம்

ஆஸ்கர் இறுதி பட்டியல் வெளியீடு; சூர்யாவின் ஜெய்பீம் இடம்பெறவில்லை; ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் ரிலீஸ்: ஜெய் பீம் ஏமாற்றம்

Surya’s Jai Bhim movie not in Oscar final list: ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெறவில்லை.

சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். படத்தில் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது. மேலும் கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் படங்கள் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ நேரடியாக இடம்பிடித்து ஆச்சரியப்பட வைத்தது.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் ’ஜெய் பீம்’ படத்துடன் சேர்த்து மொத்தம் 276 படங்கள் போட்டியிட்டன. இந்தப் படங்களில் 10 படங்கள் மட்டும் தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இதில், ‘ஜெய் பீம்’ இடம்பெறவில்லை. நிச்சயம் ஆஸ்கர் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’ இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதேபோல் மோகன்லால் நடிப்பில் வெளியான அரபிக்கடலிண்டே மரைக்காயர் என்ற மலையாள படமும் இடம் பெறவில்லை.

ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் சில இங்கே

சிறந்த படம்

பெல்ஃபாஸ்ட்

கோடா

டோண்ட் லுக் அப்

டிரைவ் மை கார்

டியூன்

கிங் ரிச்சர்ட்

லைகோரைஸ் பீஸ்ஸா

நைட்மேர் அல்லி

தி பவர் ஆஃப் டாக்

வெஸ்ட் சைட் ஸ்டோரி

சிறந்த இயக்குனர்

பெல்ஃபாஸ்ட் – கென்னத் பிரானாக்

டிரைவ் மை கார் – ரியுசுகே ஹமாகுச்சி

லைகோரைஸ் பிஸ்ஸா – பால் தாமஸ் ஆண்டர்சன்

தி பவர் ஆஃப் டாக் – ஜேன் கேம்பியன்

வெஸ்ட் சைட் ஸ்டோரி – ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

சிறந்த நடிகை

ஜெசிகா சாஸ்டெய்ன் – தி ஐ’ஸ் ஆஃப் டாம்மி ஃபேயி

ஒலிவியா கோல்மன் – தி லாஸ்ட் டாட்டர்

பெனிலோப் குரூஸ் – பேரலல் மதர்ஸ்

நிக்கோல் கிட்மேன் – பீயிங் ரிக்கர்டோஸ்

கிறிஸ்டன் ஸ்டீவர்ட் – ஸ்பென்சர்

சிறந்த நடிகர்

ஜேவியர் பார்டெம் – பீயிங் ரிக்கர்டோஸ்

பெனடிக்ட் கம்பெர்பாட்ச் – தி பவர் ஆஃப் டாக்

ஆண்ட்ரூ கார்பீல்ட் – டிக், டிக்…பூம்!

வில் ஸ்மித் – கிங் ரிச்சர்ட்

டென்சல் வாஷிங்டன் – தி ட்ராஜடி ஆஃப் மக்பத்

சர்வதேச திரைப்படம்

டிரைவ் மை கார் (ஜப்பான்)

ஃப்ளீ (டென்மார்க்)

தி ஹேண்ட் ஆஃப் காட் (இத்தாலி)

லுனானா: எ யாக் இன் கிளாஸ்ரூம் (பூடான்)

தி வொர்ஸ்ட் பெர்சன் இன் தி வேர்ல்ட் (நோர்வே)

சிறந்த இசை

நிக்கோலஸ் பிரிடெல் – டோண்ட் லுக் அப்

ஹான்ஸ் சிம்மர் – டூன்

ஜெர்மைன் பிராங்கோ – என்காண்டோ

ஆல்பர்டோ இக்லேசியாஸ் – பேரலல் மதர்ஸ்

ஜானி கிரீன்வுட் – தி பவர் ஆஃப் டாக்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suryas jai bhim movie not in oscar final list

Best of Express