Advertisment

யூடியூப் வியூஸ்: அண்ணாத்த-யை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்!

இருப்பினும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மறுநாள் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டீசர் யூடியுப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் தாண்டி கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Surya's Jaibhim movie teaser, Jaibhim teaser, Surya, Jaibhim teaser views crossed Annaatthe movie teaser, ரஜினியின் அண்ணாத்த, ரஜினிகாந்த், சூர்யாவின் ஜெய்பீம், ஜெய்பீம் டீசர், அண்ணாத்த டீசர், Rajinikanth's Annaatthe teaser, Annaatthe teaser, tamil cinema news, Rajinikanth, Surya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியான பிறகு, மறுநாள் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் டீசர் வெளியாகியிருந்தாலும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் ஜெய்பீம் டீசர் அண்ணத்த படத்தின் டீசரைத் தாண்டியிருக்கிறது.

Advertisment

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இதையடுத்து, அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்பட்டது. அதே போல, ஒருவாரத்துக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது. ரஜினியின் மாஸான அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வைரலானது.

அதே போல, இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 15ம் தேதி வெளியானது. ஜெய்பீம் என்பது தலித் அரசியலின் முழக்கமாக இருந்துவருகிறது. பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சமூக நிலையிலும் அடித்தட்டில் உள்ள பழங்குடி இருளர்கள் சமூகத்தினரைப் பற்றிய ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பொதுவாக ரஜினி திரைப்படத்தின் டீசர் வெளியானால் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை வேறு எந்த தமிழ் படமாவது தாண்ட முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறிதான். ஆனால், அண்ணாத்த டீசரின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை ஜெய்பீம் படத்தின் டீசர் தாண்டியுள்ளது.

யூடியூபில் அக்டோபர் 14ம் தேதி வெளியான அண்ணத்த படத்தின் டீசர் அக்டோபர் 17ம் தேதி இரவு 7.38 மணி வரை 77 லட்சட்து 82 ஆயிரத்து 554 பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதே போல, யூடியூபில் அக்டோபர் 15ம் தேதி வெளியான ஜெய்பீம் படத்தின் டீசர் அக்டோபர் 17ம் தேதி இரவு 7.38 மணி வரை 1 கோடியே 17 லட்சத்து 37 ஆயிரத்து 045 பார்வைகளைப் பெற்று அண்ணத்த டீசரை தாண்டியுள்ளது. ஆனால், லைக்குகளில் அண்ணாத்த படத்திற்கு குறைவாகத்தான் உள்ளது. அண்ணாத்த படம் 4.51 லட்சம் லைக்குகளையும் 22 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் பெற்றுள்ளது. ஆனால், ஜெய்பீம் படத்தின் டீசர் 3.44 லட்சம் லைக்குகளையும் 5.5 ஆயிரம் டிஸ் லைக்குகளையும் பெற்றுள்ளது.

இருப்பினும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மறுநாள் வெளியான சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டீசர் யூடியுப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் தாண்டி கவனம் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajinikanth Surya Annatha Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment