அரசியலுக்கு வருகிறாரா சூர்யா – சந்தேகத்தைக் கிளப்பும் என்.ஜி.கே டீசர்!

இன்றைய சூழலில், பலரின் பார்வையும் அரசியலை நோக்கி பாய்ந்திருக்கும் நிலையில், அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக படங்களும் உருவாக்கப் படுகின்றன.

By: Updated: February 14, 2019, 03:47:33 PM

சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த என்.ஜி.கே டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டிருக்கும் இயக்குநர் செல்வராகவன், இந்தப் படத்தை இயக்கியிருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இதனைத் தயாரித்துள்ளனர். ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, ஜெகபதி பாபு, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் என்.ஜி.கே படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு மீண்டும் செல்வா-யுவன் கூட்டணி இணைந்திருக்கிறது.

படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே என்.ஜி.கே-வை கொண்டாடி வந்த சூர்யா ரசிகர்கள், படத்தின் டீசர் வெளியீட்டிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது.

“உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியலுக்கு வந்தா எவ்வளவு நல்லாருக்கும்ன்னு நெனைச்சி பாத்தேன்” என பாலாசிங்கின் குரல் ஒலிக்கும் போது, பெரியார், அம்பேத்கர், காந்தி, காமராஜர், அண்ணா, கலைஞர், வாஜ்பாய், நல்லக்கண்ணு, மன்மோகன் சிங், வைகோ, சோனியா காந்தி, அத்வானி என பல அரசியல் தலைவர்களின் படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதை திரையில் காண முடிகிறது.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி என்.ஜி.கே திரைப்படம் உருவாகியிருப்பதை, இதன் 1 நிமிட 7 நொடி டீசர் நமக்கு தெரியப்படுத்துகிறது.

இன்றைய சூழலில், பலரின் பார்வையும் அரசியலை நோக்கி பாய்ந்திருக்கும் நிலையில், அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக படங்களும் உருவாக்கப் படுகின்றன. மற்ற அரசியல் படங்களில் இருந்து, இந்த நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) எந்த வகையில் வித்தியாசப்பட்டிருக்கிறான் என்பது படம் வெளிவரும் போது தான் தெரிய வரும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Suryas ngk teaser an action packed political drama

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X