இத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி!
Sushant Singh Rajput, Rhea Chakraborty vacation in Italy: பாலிவுட் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்ட்டும், ரியா சக்ரவர்த்தியும் இத்தாலியின் கேப்ரி என்ற நகரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அந்நகரத்தில் அவர்கள் ஷாப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. View this…
Sushant Singh Rajput, Rhea Chakraborty vacation in Italy: பாலிவுட் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்ட்டும், ரியா சக்ரவர்த்தியும் இத்தாலியின் கேப்ரி என்ற நகரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அந்நகரத்தில் அவர்கள் ஷாப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.
ஆன்லைனில் வெளியான படங்களில், ரியா ஃப்ளோரல் டிஸைன் ஸ்கர்ட்டும், கருப்பு நிற டாப்பும் அணிந்திருக்கிறார். அவர் ரோட்டோரக் கடையில் ஏதோ வாங்க, வெளியே நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் சுஷாந்த். இவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பாவில் விடுமுறையை அனுபவித்து வருவதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் பிரான்சின் பாரிஸில் சுற்றித் திரிந்தனர்.
இருவரும் தங்களது படங்களை தனித்தனியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மறந்தும் கூட ஒன்றாக இருக்கும் படங்களை பதிவிடவில்லை. ரியா தனது படங்களை ஈபிள் டவரிலிருந்தும், சுஷாந்த் டிஸ்னிலேண்டிலிருந்து தன்னைப் பற்றிய வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டார்.
சுஷாந்த் மற்றும் ரியா நீண்ட காலமாக டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்தாலும் இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை. சமீபத்தில், சுஷாந்த் சிங்கிளாக இருக்கிறாரா என்று ஒரு பத்திரிக்கையின் நேர்க்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு ”இது போன்ற ஒரு தனிப்பட்ட கேள்விக்கு உண்மையிலேயே பதிலளிக்க நான் நிறைய பணம் கேட்பேன்” என கிண்டலாக பதிலளித்திருந்தார் சுஷாந்த். தவிர, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தோனியாக சுஷாந்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது!