2015 ஆம் ஆண்டு வேர்லட் கப் குறித்து பேச வருகிறது தோனி 2 !

படத்தை பார்த்த தோனியின் ஹெட்டர்ஸ் கூட படத்திற்கு பிறகு தோனியை நேசித்தனர்

தல தோனியின் வாழ்க்கை   வரலாற்றை கூறிய ’எம்.எஸ்.தோனி’ படத்தின் இரண்டாம் பாகம்  தயாராகி வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

’தல தோனி’ என்ற பெயர் கேட்டதுமே ஆர்பரிக்கும் ரசிகர் கூட்டங்கள் ஒருபக்கம். இந்தியாவின் கேப்டனாக தனது முழு பொறுப்பையும் கவனமாக கையாள வேண்டும் என்ற பொறுப்பு மறுபக்கம்.இப்படி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இன்று வரை ரியல் ஹீரோ போல் தெரியும் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை நம்கண் முன்னே காட்டிய திரைப்பாம் தான் ’எம்.எஸ்.தோனி’

தோனியின் பள்ளி பருவம் தொடங்கி, கால்பந்து கோல்கீப்பர், கிரிக்கெட் விக்கெட் கீப்பர், உள்ளூர் தொடர், டிடிஆர் வாழ்க்கை, காதல், கிரிக்கெட் வெற்றி -தோல்வி, முதல் உலககோப்பை என அனைத்தையுமே கண்முன்னே காட்டி இருந்தார் இயக்குனர் நீரஜ் பாண்டே. இந்த படத்தை பார்த்த தோனியின் ஹெட்டர்ஸ் கூட படத்திற்கு பிறகு தோனியை நேசித்தனர் என்றால் அது மிகையல்ல.

இந்த படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சிஷாந்த் படம் முழக்க தோனியாகவே வாழ்ந்திருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லை பல்வேறு தரப்பினரும் இந்த படத்தை கொண்டாடினர். இந்நிலையில் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் இடம் பெறாத தோனியின் வாழ்க்கை பயணம் மற்றும் கிரிக்கெர் பயணம் குறித்து இரண்டாம் பாகத்தில் சொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதி வரை முன்னேறியது தொடர்பாகவும் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் தன் மீதான தொடர் விமர்சனங்களுக்கு பெங்களூரு அணிக்கெதிராகச் சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றி பெற வைத்தது வரை இதில் காட்சிப்படுத்தவுள்ளார்களாம்.

அத்துடன் மகளுக்கும் – தந்தைக்குமான பாசப்போராட்டம், தோனியின் வாழ்க்கையில் சாக்‌ஷீயின் பங்கு குறித்தும் இதில் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2015 ஆம் வேர்லட் கப் குறித்து இந்த பாகத்தில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’எம்.எஸ்.தோனி 2’வின் இயக்குனர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை ஆனால், தோனியின் ரோலில் நடிக்க நடிகர் சிஷாந்த் -தை தவிர வேறு யாரும் இல்லை என்று படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

×Close
×Close