scorecardresearch

தியேட்டர் ரிலீஸிற்கு காத்திருக்காத சுஷாந்த் சிங்கின் இறுதி படம்! ரசிகர்கள் வேதனை

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாக உள்ளது.

Sushant Singh Rajput's last movie will be released on Disney Hot Star
Sushant Singh Rajput's last movie will be released on Disney Hot Star

Sushant Singh Rajput’s last movie will be released on Disney Hot Star : சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி அவருடைய மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த மரணம். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். வாரிசு நடிகர்களால் பாலிவுட்டில் வளரும் நட்சத்திரங்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் கூறுகிறனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த இறுதி திரைப்படமான தில் பச்சாரா ஓ.டி.டி. தளத்தில் வெளிவர உள்ளது. ஆங்கில நாவலான தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஜான் க்ரீன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல் ஆகும். இதனை தழுவி ஆங்கிலப்படம் ஒன்றும் வெளியானது.

இந்தியில் முகேஷ் சப்ரா இந்த படத்தை எடுக்க, ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்தியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் ஜூலை 24ம் தேதி வெளியாக உள்ளது. ஒரு சிறந்த கலைஞனின் கடைசி படத்தினை சினிமா அரங்குகள் தயாரான பிறகு த்யேட்டரிக்கல் ரிலீஸாகவே வெளியிடலாமே, இது அவரின் கலை தாகத்திற்கு தரும் மரியாதை என்று அவருடைய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sushant singh rajputs last movie will be released on disney hotstar