/tamil-ie/media/media_files/uploads/2018/05/Facebook-21.jpg)
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், 6 மாதத்திற்கு முன்பு, 15 வயது சிறுவனால் தனக்கு நேர்ந்த பாலியல் சில்மிஷம் குறித்து ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் சுஷ்மிதா சென். இந்தியாவின் முதல் அழகி பட்டத்தை வென்றவர். தமிழில் கூட அர்ஜூன் மற்றும் நாகர்ஜூனா உடன் நடித்துள்ளார். இதை தவிர புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார். இரண்டு குழந்தைளை தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவிற்கு உதவி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம் மும்பையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுஷ்மிதா 6 மாதத்திற்கு முன்பு தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பற்றி தைரியமாக பகிர்ந்துள்ளார்.
” ரோட்டில் செல்லும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு இல்லை. என்னை போன்ற நடிகையெல்லாம் 5 பாதுகாவலர்களுடன் செல்வதால் நாங்கள் எல்லோருமே பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையில்லை.
6 மாதங்களுக்கு முன்பு , நான் விருது ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதிமான கூட்டல் நெரிசல் அப்போது ஒருவன் என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றான். அவனை நானே கையும் களவுமாக பிடித்தேன். பின்பு தான் தெரிந்தது அவனுக்கு வயது 15 என்று.
15 வயது சிறுவன் இப்படி நடந்துக் கொண்டது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. இருந்தும் அவனின் எதிர் காலம் குறித்து யோசித்தேன். போலீஸில் புகார் அளித்தால் அவனின் வாழ்க்கையே பாதிக்கும் என்று நினைத்து, அவனை தனியாக அழைத்து பேசினேன்.
முதலில் செய்த தவறை ஒத்துக் கொள்ள மறுத்த சிறுவன். பிறகு செய்த தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டான். பின்பு அவனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தேன். அந்த சிறுவனுக்கு அவன் செய்தது தவறு என்று கூட தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தை அளித்தது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.