/tamil-ie/media/media_files/uploads/2019/02/a549.jpg)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ‘என்.ஜி.கே’. தீபாவளி ரிலீஸ் ரேஸில் என்.ஜி.கே இருக்கும் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகும் கூட பெரிதாக அப்டேட் எதுவும் இல்லை.
படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்காத செல்வராகவன் மீது சூர்யா அதிருப்தி கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கை எட்டியுள்ள என்.ஜி.கே திரைப்படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், என்.ஜி.கே டீசர் குறித்து நடிகர் கார்த்தி பதில் தெரிவித்துள்ளார். அதில், "என்ஜிகே டீசர் பாத்துட்டேன். வெறித்தனமா இருக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.
Actor @Karthi_Offl gives a preview of @Suriya_offl 's #NGKTeaser :
" #NGKTeaser Paathuttan.. Verithanamana irukku.. " ????
During #Dev FB Live this afternoon..
— Ramesh Bala (@rameshlaus) 10 February 2019
ஏற்கனவே காண்டோடு வெயிட்டிங்கில் இருக்கும் சூர்யா ரசிகர்கள், கார்த்தியின் இந்த ட்வீட்டுக்கு பிறகு வெறித்தனமாக அதனை ஷேர் செய்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்.14 மாலை 6 மணிக்கு 'நந்த கோபால குமரன்' டீசர் வெளியாகவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.