ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பாலியல் சீண்டல் நடந்ததாக கூறிய பெண்ணுக்கு, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசைக்கச்சேரி சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகத்தால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகள் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்பட்டதால், அரங்கில் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல பெண்கள் கூட்ட நெரிசலால் தாங்கள் அனுபவித்த துன்புறுத்தல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வகையில் கச்சேரியில் கலந்து கொண்ட ஒரு பெண், தனக்கு நடந்த பாலியல் சீண்டல் தொடர்பாக X தளத்தில் ட்வீட் செய்துள்ளார். இதற்கு, அந்த இசை கச்சேரியில் பாடகிகளில் ஒருவராக இருந்த ஸ்வேதா மோகன் பதிலளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது நடுங்கும் கைகளின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது அவரது அதிர்ச்சிக்கு ஒரு சான்றாகும், மேலும் அவர் துன்புறுத்தப்பட்டதைப் பற்றியும், சீண்டல்கள் தன்னைத் தொடர்ந்து எப்படி துன்புறுத்தின என்பதைப் பற்றியும் பேசினார். “எனது இதயத்தில் இவ்வளவு அழுத்தம் இருக்க எழுந்தேன். இன்று எனக்கு இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு என்னை ஆட்டிப்படைக்கிறது. நான் ஒருவரிடம் விலகச் சொல்லி வழிகேட்டப்போது, அந்த நபர் என்னை பாலியல் ரீதியாக தொட்டார். என்னால் தாங்க முடியவில்லை,” என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த பாடகி ஸ்வேதா மோகன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார், மேலும் "என் இதயம் உன்னிடம் செல்கிறது" என்று கூறினார்.
மேலும் ஸ்வேதா மோகன் தனது பதிவில், “இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனித நேயத்துக்காக நின்ற ஒரு ஐகானுக்கு, அவரது இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வலியை எப்போதும் குறைக்கும் வகையில் இசையை வழங்கும் நிகழ்ச்சியில் இது நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ரஹ்மான் சார் தனது கச்சேரியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் போன்ற குற்றவாளிகளுக்கு தகுதியானவரா? அவர் சிறந்தவர், மிகச் சிறந்தவர். ஒவ்வொரு கச்சேரியிலும் அவர் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய மரியாதையை நினைவூட்டுவதற்காக குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாடலை அர்ப்பணிக்கிறார். ஆனால் ஐயோ! உறுதியாக இருங்கள், #சிங்கப்பெண்ணே! நாம் ஒரு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம். என் இதயம் உன்னிடம் செல்கிறது. இதை முறியடித்து மீண்டும் எழுச்சி பெற உங்களுக்கு ஆற்றலை அனுப்புகிறேன்! "உனக்காக நீயே உதிப்பாய் அம்மா!" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஹ்மான் நடந்த குளறுபடிகளுக்கு தனது X தளத்தில் வருத்தம் தெரிவித்தார். "அன்புள்ள சென்னை மக்களே, துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் டிக்கெட் வாங்கிய உங்களில் நுழைய முடியாமல் போனவர்கள், தயவுசெய்து நீங்கள் வாங்கிய டிக்கெட்டின் நகலை arr4chennai@btos.in இல் உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும். @ BToSproductions @actcevents," என்று ட்வீட் செய்தார்.
மேலும் மற்றொரு பதிவில், “என்னை சிலர் G.O.A.T (எக்காலத்திலும் சிறந்தவர்) என்று அழைக்கின்றனர். எனவே நமது விழிப்புணர்வுக்காக இந்த முறை நானே பலிகிடா ஆகிறேன். சென்னையின் கலை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, திறன்மிகு கூட்ட மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, பார்வையாளர்களின் விதிகளைப் பின்பற்றச் செம்மைப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்குதல் ஆகியவற்றுடன் செழிக்கட்டும். சென்னையில் ஒரு கலாசார மறுமலர்ச்சியைத் தூண்டி, நமக்கு மிக அவசியமான, உள்ளூர் மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்டாடுவோம். இறைவன் நாடினால் நடக்கும்” என்று ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“