சீரியலுக்கு வந்த நீச்சல் வீராங்கனை… சூப்பரா டான்ஸ் ஆடுறாங்க!

‘Ninaithale Inikkum’ zee tamil serial Tamil News: தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ள நீச்சல் வீராங்கனை ஜனனி பிரபு, ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

swimmer Janane Prabhu Tamil News: janane Prabhu excited about her TV debut with 'Ninaithale Inikkum'

swimmer Janane Prabhu Tamil News: சின்னத்திரையில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக அவ்வப்போது புதிய புதிய சீரியல்கள் தோன்றிய வண்ணமே உள்ளன. அந்த வகையில் சீரியல்களில் கால் பதிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலை ஒளிபரப்ப உள்ளது. ஆகஸ்ட் 23 முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலின் முக்கிய ரோலில் விஜய் டிவி ‘ஆயுத எழுத்து’ சீரியல் புகழ் ‘ஆனந்த் செல்வன்’ நடிக்கிறார். இவருடன் ஸ்வாதி, நேகா, தீப்தி ராஜேந்திரன் மற்றும் மிதுன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதேபோல், நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவும் நடிக்க உள்ளார். மேலும், இந்த சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார் ஜனனி பிரபு.

என்ஜியரிங் பட்டம் பெற்றுள்ள ஜனனி முதலில் மாடலிங் துறையில் கால் பதித்தவர். கடந்த 2018ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்று அசத்தினார். தவிர, நீச்சல் வீராங்கனையாகவும் ஜொலித்த இவர், தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். அதோடு சிறப்பாக நடனமாடக் கூடியவரும் ஆவார்.

சின்னத்திரையில் முதன்முறையாக அறிமுகமாக உள்ள ஜனனி தற்போது மகிழ்ச்சியில் திழைத்துள்ளார். இதனை அவரது இன்ஸ்டா பக்கத்திலும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த சீரியலுக்கான ப்ரோமோவை பகிர்ந்துள்ள அவர், சீரியலில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், நடிப்பு துறையில் கால்பதித்துள்ள தனக்கு ரசிகர்கள் தொர்ந்து அன்பையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் நளினி என்ற கதாப்பாத்திரத்தில் ஜனனி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Swimmer janane prabhu tamil news janane prabhu excited about her tv debut with ninaithale inikkum

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com