சைரா நரசிம்ம ரெட்டி: என்னய்யா இத்தனை மொழில டீசர் விட்டுருக்கீங்க!?

Sye Raa Narasimha Reddy: ராணி லட்சுமி பாயாக சிறப்புத்தோற்றத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். 

Tamilrocker leaks Sye Raa Narasimha Reddy

Sye Raa Narasimha Reddy Teaser: இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம், ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இதில் டைட்டில் ரோலில் நடிக்கிறார் சிரஞ்சீவி. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இதனை, சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராணி லட்சுமி பாயாக சிறப்புத்தோற்றத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அதோடு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், ராஜீவன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். தற்போது இப்படத்தின் படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு நடிகரின் பிறந்தநாளின் போதும், அவர்களுடைய லுக்கை வெளிப்படுத்து போஸ்டர் ரிலீஸ் செய்தனர் படக்குழுவினர். அதோடு சமீபத்தில் இதன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நேற்று இதன் டீசர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. அதோடு, படம் வரும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது!

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sye raa narasimha reddy chiranjeevi amitabh bachchan nayanthara vijay sethupathi

Next Story
அப்பாவையும், ரஜினி அங்கிளையும் வச்சு படம் இயக்க ஆசை – அக்‌ஷரா ஹாசன்!Akshara Haasan love to direct a movie with Kamal haasan and Rajinikanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com