Tamilrockers: படங்கள் இணையத்தில் வெளியாவதை எதிர்த்து என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், தமிழ் ராக்கர்ஸை கட்டுப்படுத்தவே முடியாது போல் தெரிகிறது. தமிழ் ராக்கர்ஸில் புதிய வரவு, “சை ரா நரசிம்ம ரெட்டி”
Advertisment
இண்டஸ்ட்ரியின் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மெகாஸ்டார் சிரஞ்சீவி, உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன், தமிழ் நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, தமன்னா, கன்னட நடிகர் சுதீப் போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமே ”சை ரா நரசிம்ம ரெட்டி” படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இதை நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான, ராம் சரண் தயாரித்துள்ளார். ”சை ரா நரசிம்ம ரெட்டி”யின் முக்கிய குறை, ஒரு பரந்த கதையை பிரதான வணிக சினிமாவின் குறுகிய வரையறைக்கு பொருந்தக்கூடிய வட்டத்துக்குள் கட்டாயப்படுத்த முயற்சித்திருக்கிறார் சுரேந்தர். இதன் விளைவாக, ஒரு வழக்கமான சிரஞ்சீவி படத்தைப் போல் தான் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது” என மனோஜ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Advertisment
Advertisements
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் தமிழ் ராக்கர்ஸின் லீக்காகியிருப்பதால், மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.