/tamil-ie/media/media_files/uploads/2019/08/Nayanthara-in-Sye-Raa-Narasimha-Reddy.jpg)
சைரா நரசிம்ம ரெட்டியில் நயன்தாரா
Sye Raa Narasimha Reddy: சமீபத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்கும், “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் டீசர் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன், திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
இருப்பினும் இதில் நயன்தாரா கலந்துக் கொள்ளாதது, பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது. இதற்கிடையே சிரஞ்சீவிக்கு எதிரான ரசிகர்கள், ’நயன்தாரா இல்லாத இந்த விழா, ’சுனகானந்தம்’ என்றார்கள். நாய் சந்தோஷம் என்பது இதன் பொருள். அதாவது ”நயன்தாரா கலந்துக்காத இந்த நிகழ்ச்சி நாய்க்கு கிடைத்த சந்தோஷம் போல தான்” என சிரஞ்சீவிக்கு எதிரான ரசிகர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள். மற்ற படங்களைப் போலவே, மெகாஸ்டரின் அழைப்பையும் பொருட்படுத்தாமல் ’சைரா நரசிம்ம ரெட்டி’ நிகழ்வையும் நயன்தாரா தவிர்த்து விட்டார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பின்னர் ஒருவழியாக அமைதியானார்கள்.
நயன்தாரா தற்போது வெளிநாட்டில் ’தர்பார்’ படபிடிப்பில் உள்ளார். நடந்து முடிந்தது ‘சைரா நரசிம்ம ரெட்டியின்’ டீசர் வெளியீட்டு விழா மட்டுமே, ட்ரைலர் வெளியீடு இல்லை.
இந்தப் படத்திற்கு இன்னும் பல புரொமோஷன் நிகழ்ச்சிகள் இருக்கும். டீசர் வெளியீட்டில் கலந்துக் கொள்ளாத சில நட்சத்திரங்கள் மற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். இதில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, சுதீப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.