விஜய் டிவி சீரியல்… வந்தாச்சு விஜய டி.ஆர்: ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ரிலீஸ்!

டி.ராஜேந்தர் டிவி சீரியலில் நடிக்கிற புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

T Rajendar enters into tv serial, T Rajendar enters small screen, T Rajendar acts vijay TV Serial, டி ராஜேந்தர், டிவி சீரியலில் நடிக்கிறார் டி ராஜேந்தர், தென்றல் வந்து என்னை தொடும், விஜய் டிவி, விஜய் டிவி, Thendral Vanthu Ennai Thodum serial, T Rajendar acts vijay TV Serial, Thendral Vanthu Ennai Thodum, T Rajendar acts in Thendral Vanthu Ennai Thodum

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் இருந்த டி.ராஜேந்தர், தற்போது சின்னத் திரையில் நுழைந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது அடுக்குமொழி வசனங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த டி.ராஜேந்தர், சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு என பல பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். ஹீரோவாக நடித்து அவருக்கென்று தனியாக ரசிகர்களைக் கொண்டிருந்தார். தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இப்படி, திரைப்படங்களில் ஆல் இன் ஆல் ஆக வலம் வந்த டி.ராஜேந்தர், தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட, சர்ச்சை சீரியலான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் டி.ராஜேந்தர் நடிக்கிறார்.

தற்போது, டி.ராஜேந்தர் விஜய் டிவியில் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் உள்ளூர் ரொளடியான கதாநாயகன், அமெரிக்காவில், படித்துவிட்டு இந்தியா வந்துள்ள பணக்கார பெண்ணான கதாநாயகிக்கு கோவிலில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிவிட்டு “ஒரு மஞ்சக் கயிறை கட்டிட்டா, நீ என்ன இப்போ எனக்கு பொண்டாட்டியா” என்று கேட்கிற புரோமோ வெளியானது. இந்த புரோமோ பெண்களுக்கு எதிரான குற்றத்தை தூண்டுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பெண்களைத் துண்புறுத்தினால் என்ன தண்டனை என்பதை ட்வீட் செய்திருந்தார். இருப்பினும், சீரியல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி, சீரியல் தொடங்குவதற்கு முன்பே எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சம்பாதித்த ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில்தான், நடிகர் டி.ராஜேந்தர் நடிக்கிறார்.

டி.ராஜேந்தர் டிவி சீரியலில் நடிக்கிற புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: T rajendar acts vijay tv serial in thendral vanthu ennai thodum serial

Next Story
கேரக்டரை மாத்துறாங்க? விஜய் டிவி ஹிட் சீரியலில் நடிகை பஞ்சாயத்து!actress Rachitha Mahalakshmi actress Rachitha dissatisfaction, character change in Vijay TV Serial, Naam Iruvar Namakku Iurvar Serial, கேரக்டரை மாற்றுவதால் நடிகை ரச்சிதா அதிருப்தி, விஜய் டிவி, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், Rachitha, Mirchi Senthil, Vijay TV, Rachitha quits Serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com