/tamil-ie/media/media_files/uploads/2019/04/D3mrjPHUEAAIDG-.jpg)
T Rajendar Invites Rajinikanth
நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் டி.ராஜேந்தர்.
இவரது மூத்த மகன் சிம்பு, நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என அப்பாவைப் போலவே தமிழ் சினிமாவில் வேரூன்றியிருக்கிறார்.
டி.ஆரின் இளைய மகன் குறளரசன். இவர் இயக்குநர் பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதற்குக் காரணம் அவர் காதலிக்கும் பெண் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் தான் என அப்போது சொல்லப்பட்டது.
இதற்கிடையே நபீலா.ஆர்.அஹமத் என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார் குறள். இவர்களுடைய திருமண வரவேற்பு வரும் 29-ம் தேதி, ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைப்பெறுகிறது. இதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார் டி.ஆர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.