தமிழ் திரையுலகில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாகவுள்ளது. இந்த விஷயம் வெளியானதும், தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிவர் அளவுக்கு புரெவி வலுவான புயலாக இருக்காது ஏன்?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கத்தை தொடங்குகிறார். நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தேனாண்டாள் ஃபிலிம்ஸின் முரளி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியை தழுவினார். முரளி ராமசாமியின் அணியில் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்றும் அவர் பெயரிடப்பட இருக்கிறதாம். டிசம்பர் 5-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் பிரபலங்கள்: அரிய புகைப்பட தொகுப்பு
புதிதாக தொடங்கப்பட இருக்கும் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக சம்பளமே இல்லாமல் நடித்துக் கொடுக்க டி.ராஜேந்தரின் மகன் சிம்பு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர இதற்கு முன்பு, தயாரிப்பாளர் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்று ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:T rajendar starts new producer council