வில்லி ரோல் பண்ணலாம்... ஃபயர் பத்திக்கும்': வனிதா விஜயகுமார் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் | Indian Express Tamil

வில்லி ரோல் பண்ணலாம்… ஃபயர் பத்திக்கும்’: வனிதா விஜயகுமார் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார்.

வில்லி ரோல் பண்ணலாம்… ஃபயர் பத்திக்கும்’: வனிதா விஜயகுமார் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட்

நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார்.

சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும நிலையில், பிரஷாந்தின் அந்தகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் பேஷன் டிசைன், மேக்கப் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை வெளிகாட்டி வரும் வனிதா அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் பதிவுகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

My Photoshoot Vlog | Vanitha Vijaykumar

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது போட்டோஷூட் எடுக்கும் புகைப்படங்கள் தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். வீடியோவின் தொடக்கத்தில் போட்டோஷூட் தொடங்குவதற்கு முன் மேக்கப் எப்படி போடுவது என்பது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், ஒரு ரசிகர் அழகு தேவதை என்றால் அது நீங்கள் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், மஞ்சுளா மேம் மாதிரியே இருக்கீங்க பிளாக் சேரி சோ கியூட் என்றும், வில்லி ரோல் பண்ணலாம் ஃபயர் பத்திக்கும் என்று மற்றொரு ரசிகரும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Taamil actress vanitha vijayakumar new photoshoot video in tamil