Taapsee Pannu Birthday: தென் திரையுலகின் பிரபல நடிகை டாப்ஸி பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாகவும் கதாநாயகியாவும் கரம் கோர்த்த இவர், சமீபத்தில் வை ராஜா வை படத்தில் வில்லியாக நடித்தார்.
வெள்ளாவி வச்சி வளர்த்தாங்களா, வெயிலுக்கே காட்டாமல் வளர்த்தாங்களா என்ற பாடல் வரிகள் மூலம் பிரபலம் பெற்ற டாப்ஸி பானு பற்றி நீங்க உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள் என்ன தெரியுமா?
Taapsee Pannu Birthday: டாப்ஸி பானு பிறந்தநாளில் அவரை பற்றி 5 தகவல்கள்:
- தென் திரையுலகில் ஒரு வருடத்தில் 7 படங்கள் வெளியான ஒரே நடிகை டாப்ஸி தான். 2011ம் ஆண்டு டாப்ஸி நடித்திருந்த தமிழ் மற்றும் பிறமொழி 7 படங்களும் வெளியானது.
- நடிகை டாப்ஸியின் செல்லப்பெயர் மேகி என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். சிறு வயதிலேயே கதக் மற்றும் பரத நாட்டியம் கற்றுக்கொண்டவர், கல்லூரி படிக்கும் வரை ஆர்வமாக பயின்று வந்தார்.
பள்ளியில் நடனம் ஆடும் டாப்ஸி
- சினிமாவில் நடிக்க வந்த பிறகு பல நடிகர்கள் தங்களின் படிப்புகளை பாதியில் நிறுத்திவிடுவார்கள். ஆனால் டெல்லியின் பள்ளிப்படிப்பை முடித்த டாப்ஸி, பென்பொருள் எஞ்சினியரிங் படித்து பட்டம் பெற்றார். படிப்பிற்கு பிறகு, fontswap என்ற சாஃப்ட்வேர் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
கல்லூரியில் டாப்ஸி
- 2008ம் ஆண்டு, மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றார். அந்த போட்டியில் பார்வதி ஓமனக்குட்டன் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். இருப்பினும், அதே போட்டியில் ஃபெமினா ஃபிரெஷ் ஃபேஸ் பட்டத்தை தட்டிச்சென்றார் டாப்ஸி.
மிஸ் இந்தியா போட்டியில் டாப்ஸி
- 9ம் வகுப்பு படிக்கும்போது காதல் ஏற்பட்டு பிறகு அது தோல்வியில் முடிந்தது. இதற்காக தன் காதலனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் முன்பு இருந்தாலும், தற்போது நல்ல குணம் கொண்ட ஒருவரையே திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.