இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த அந்தப் படம் தேசிய விருதையும் வென்று மாபெரும் வெற்றியடைந்தது.
தெலுங்கிலும் சில படங்களில் நடித்தவர், இந்தியில் ‘பிங்க்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்தார். பின்னர் காஞ்சனா 2-வுக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும், ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதனை இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் டெஸ்ட் மேட்சில் கேப்டனாக உள்ள மிதாலி ராஜின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறாராம் டாப்ஸி. பெண்கள் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மிதாலியின் வாழ்க்கையில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. அதனால் இதனை வெகுவாக வரவேற்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
இதற்கு முன் ஹாக்கிவை மையமாக வைத்த ‘சூர்மா’ படத்தில் டாப்ஸி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.