Advertisment

திருமணத்திற்கு பின் முதல் போட்டோ... இது சேலையா? இல்ல கோட் ஷூட்டா? : டாப்சி ரீசன்ட் க்ளிக்ஸ்

டாப்சி பண்ணு, பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை இந்த மாத தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இது குறித்து அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Taapsee Pannu ecent

நடிகை டாப்சி திருமணத்திற்குப் பிறகு முதல் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் முன்னாள் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகை டாப்சி பண்ணு, தனது திருமணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தற்போது டாப்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்சி பண்ணு. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான டங்கி படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்த இவர், தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு,  முன்னாள் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டார்.

ஆங்கிலத்தில் படிக்க : Taapsee Pannu shares first photos in a saree after wedding with Mathias Boe, fans say ‘please post wedding pics too’

இந்த திருமணம் டாப்சியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் கூட இது குறத்து அவர், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்ல. இருப்பினும், டாப்ஸி திருமணம் குறித்த செய்தி வெளியானதிலிருந்து, அவர் தனது திருமண புகைப்படங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது டாப்சி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சேலை கட்டி அதனுடன் கோட் ஷூட் போட்டு வித்தியாசமான வகையில் டாப்சி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த பதிவில், "சேலையுடன் கூடிய இந்த காதல் ஒருபோதும் முடிவடையாது என்று நம்புகிறேன்..." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள், டாக்சி ஜி, தயவுசெய்து திருமணத்தின் புகைப்படங்களையும் வெளியிடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். மற்றொரு ரசிகர் திருமண வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, டாப்சி தனது நண்பரும், நடிகருமான அபிலாஷ் தப்லியால், அவர்களின் ஹோலி கொண்டாட்டத்தின் சில புகைப்படங்களைப் வெளியிட்டிருந்தார்.

இந்த கொண்டாட்டத்தில், டாப்ஸி 'சிந்தூர்' அணிந்திருப்பது போல் இருந்தது. அந்த இந்த புகைப்படங்களில் மத்தியாஸும் இருந்தார். அதற்கு முன், நடிகர் பவைல் குலாட்டி, டாப்ஸியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உதய்பூரில் இருந்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் டாப்ஸியின் சகோதரி ஷகுன் இடம்பெற்றிருந்தார். எழுத்தாளர் கனிகா தில்லானும்  டாப்சியின் திருமணத்தில் அவரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.

டாப்ஸி கடைசியாக ஷாருக்கான் நடித்த டங்கி படத்தில் நடித்தார், இந்த படம் அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. டாப்ஸி அடுத்ததாக ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபாவில் நடிக்கிறார், இது அவரது 2021 திரைப்படமான ஹசீன் தில்ருபாவின் தொடர்ச்சியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Taapsee Pannu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment