Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் :
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஓடிடு கண்ணா திரும்ப விஜய்டிவி பக்கம் வந்துவிடாதே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் போச்சி இந்த சீரியல் வேஸ்ட்டா போகுது. கண்ணன் ஏற்கனவே சுயநலவாதி இப்போ ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணா குடும்பம் பிரிஞ்சிடும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் கண்ணன் என்று கூறியுள்ளார். மேலும் பல ரசிகர்கள் கண்ணனுக்கு எதிராகவே கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் கோபியை கலாய்த்தும், திட்டியம் பதிலளித்து வருகின்றனர். ஆனால் பலரும் இது எங்க போய் முடியுமே என்று பதிவிட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பாரதி – கண்ணம்மா இடையே துளிர்விடும் காதலுக்கு மகிழ்ச்சி தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் பலர் டிஎன்ஏ டெஸ்ட் எப்போ என்பது குறித்து கேள்வி எழுப்பயுள்ளனர்.
ராஜாராணி 2
இந்த ப்ரமோவுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சறைபெட்டி கேட்டால் ட்ரங்க் பெட்டி கொண்டு வறீங்ளே சந்தியா நீங்க எப்படி சமைப்பீங்க என்று கேட்டுள்ளனர். மேலும் நீங்க எப்படிதான் நல்லா சமைச்சாலும் சிவகாமிகிட்ட கெட்ட பேருதான் என்று கூறியுள்ளர்.
ரோஜா
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாளைக்கு அர்ஜுன் சார்னு கத்திகிட்டு ரோஜா எழும்புவாங்க காரணம் இது கனவு.. என பதிவிட்டுள்ளார். இந்த ரெண்டு பேரையும் சாகடித்து விட்டு இந்த கதையை இத்துடன் முடித்து விடவும் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்னாடா இது ஒன்னு கடத்துராங்க இல்லனா.அடிச்சிகிறாங்க இத தவிர வேற ஒன்னும் இல்லேயே.ஓரு நல்ல கதைய கொண்டு வாங்கையா.. என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் தேவையில்லாத சீன் இல்லாம கதைக்கு வாங்க என்றே பதிவிட்டுள்ளனர்.
இந்த பரமோகளின் கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். மற்ற அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil