சித்தார்த் ’டக்கர்’ படம் திரை விமர்சனம்

சாக்லேட் பாயாகவே நாம் பார்த்த பழகிய சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு சற்று புதுமையாகவே இருக்கிறது.

சாக்லேட் பாயாகவே நாம் பார்த்த பழகிய சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு சற்று புதுமையாகவே இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Siddharth

Siddharth

நவீன் குமார்

Advertisment

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சித்தார்த்தின் ‘டக்கர்’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. படம் எப்படி என்பதை கீழே காணலாம்.

கதைக்களம்

பணம்தான் வாழ்க்கையில் முக்கியம், பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நம்பும் நாயகனும் (சித்தார்த்), பணத்தினால் தான் வாழ்வில் எல்லா பிரச்சனையும் வருகிறது என நம்பும் நாயகியும் (திவ்யான்ஷா) ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து பயணிக்க நேர்கிறது. இந்த பயணம் அவர்களுடைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது, என்பதே ’டக்கர்’ படத்தின் கதை.

Advertisment
Advertisements

நடிப்பு

சித்தார்த் தன் வழக்கமான Suttle நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாக்லேட் பாயாகவே நாம் பார்த்த பழகிய சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு சற்று புதுமையாகவே இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நாயகியான திவ்யான்ஷாவிற்கு நடிப்பை விட கிளாமர் காட்சிகள் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. யோகி பாபு,முனீஷ்காந்த் ஆகியோருடைய காமெடி காட்சிகள் ஓரளவுக்கு சிரிப்பை தந்தாலும் பெரிய அளவில் எடுபடவில்லை.

இயக்கம் மற்றும் இசை

முதல் பாதியின் திரைக்கதை ஓரளவிற்கு விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதை, படத்திற்கு சறுக்கலாக அமைந்திருக்கிறது. நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்தை ஓரளவிற்கு காப்பாற்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பின்னணி இசை, படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக அமைந்திருப்பது சிறப்பு.

படம் எப்படி ?

படத்தின் தொடக்கத்தில் இருக்கும் விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் அடுத்தடுத்த காட்சிகளில் கரைவதை காண முடிகிறது. ஒரு சில ஆக்சன் காட்சிகள் தெறிக்கிறது. குறிப்பாக கார் சேசிங் காட்சிகள் வேற லெவல். ஹீரோயின் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திருந்தாலும், கதையாக கவரவில்லை என்பதே உண்மை.

மொத்தத்தில் நாம் நிறைய பார்த்து சலித்து போன கதையில் சற்று ரொமான்ஸ்,ஆக்சன் காமெடி ஆகியவற்றை கலந்து நம்மை Entertain செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அது பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: