/indian-express-tamil/media/media_files/Tn6djkb9M4bYFShY34bA.jpg)
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா; விடிய விடிய கோலாகலம்; டான்ஸ் ஆடி மகிழ்ந்த தமன்னா, பூஜா ஹெக்டே
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகைகள், தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் நேற்று (மார்ச் 8) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அந்த வகையில், கோவை அருகே வெள்ளியங்கிரியில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஈஷா மையத்தில் நடைபெறும் விழாவில், அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துக் கொள்வர்.
அந்த வகையில் நேற்றைய விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தங்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல், திரைப் பிரபலங்களில் நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து பரவசத்தோடு நடனமாடினர். மேலும் ஜக்கி வாசுதேவ் உடன் சேர்ந்து சிவனை மனமுருகி வணங்கினர். நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டேவும் மனமுருகி வணங்கினர்.
மேலும் திரைப்பட பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம் ஆகியோர் பாடல்கள் பாடி அங்கிருந்தவர்கள் உற்சாகப்படுத்தினர்.
இதில் சங்கர் மகாதேவன் தனது இசை நிகழ்ச்சியின்போது, சம்போ சிவ சம்போ பாடலை பாடி அரங்கத்தை அதிரச் செய்தார். இந்தப் பாடலை கேட்டு அங்கிருந்தவர்கள் உற்சாகமாக ஆடினர். அவர்களுடன் நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தப் பாடலுக்கு வைப் செய்தார். இதேபோல் பல்வேறு பாடல்களுக்கு நடிகைகள் தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.