Advertisment

கிஸ் பண்றதே இல்லை... 17 வருட பாலிசியை காதலருக்காக கைவிட்ட தமன்னா!

நெட்ஃபிக்ஸில் வெளியக உள்ள ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 –ல் தமன்னான விஜய் வர்மா இணைந்து நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamanna

தமன்னா - விஜய் வர்மா

திரைப்படங்களில் 17 வருடங்களாக கடைபிடித்து வந்த ஒரு பழக்கத்தை தனது காதலருக்காக கைவிட்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னான சமீபத்தில் நடிகர் விஜய் வர்மாவுடனான தனது காதலை உறுதி செய்திருந்தார்.

Advertisment

கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து சூர்யா விஜய், அஜித், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் தயாராகியுள்ள ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் முன் பாகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 2-ம் பாகம் தயாராகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், கஜோல், நீனா குப்தா, தில்லோடமா ஷோம், மிருணால் தாக்கூர், குமுத் மிஸ்ரா, அம்ருதா சுபாஷ் மற்றும் அங்கத் பேடி உள்ளிட்டோருடன் தமன்னான விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். சுஜோய் கோஷ், ஆர் பால்கி, அமித் ரவீந்தர்நாத் சர்மா மற்றும் கொங்கோனா சென் சர்மா ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள தமன்னா, தனது 17 ஆண்டு திரை வாழ்க்கையில், கிஸ் கொடுக்க கூடாது என்ற பாலிசியை தற்போது தனது காதலருக்காக கைவிட்டதாக தெரிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வரும் தமன்னா, இந்தி, தெலுங்கு மற்றும் பிற பிராந்திய மொழி சினிமாவில் நடித்து வரும் நிலையில், தனது திரைப்பட ஒப்பந்தங்களில் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை தொடர்ந்து கடைபிடித்து வந்துள்ளார்.

இது குறித்து விஜய் வர்மா கூறுகையில், நான் 17 வருடங்களாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். என் திரைப்படம் தொடர்பான காண்ட்ராக்டில் முத்தமிடக் கூடாது என்ற கொள்கை இருந்தது.அதேபோல் இதுவரை யாருக்கும் முத்தம் கொடுத்ததில்லை. தற்போது அந்த பாலிசியை மாற்றியுள்ளேன். இதன் மூலம் நான் திரையில் முத்தமிடும் முதல் நடிகர் நீங்கள்தான்’ என்று என்னிடம் கூறியதாக தெரிவித்துள்ள விஜய் வர்மா இதற்காக தான் தமன்னாவுக்கு நன்றி தெரிவித்தாக கூறியுள்ளார்.  லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படம் வரும் ஜூன் 28 அன்று Netflix –ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment