கோலிவுட், டோலிவுட், பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா,‘கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தமன்னா சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
முன்னணி கதாநாயகியாக மட்டுமில்லாமல், மோஸ்ட் வாண்டட் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் - 2, ஜீ கர்த்தா போன்ற வெப் சீரிஸ்களில் தமன்னாவின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து அதிகம் பேசப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘ஜெயிலர்’ படத்தில் “காவாலா” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமன்னாவை உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக்கியது.
இதைத் தொடர்ந்து, ஸ்ட்ரீ – 2 (stree – 2) என்கிற இந்திப் படத்தில் ஆஜ் கி ராத் (Aaj Ki Raat) என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார்.
இப்பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா நடனத்தை நினைவுபடுத்துவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ட்ரீ – 2 படத்தில் ஆஜ் கி ராத் பாடல் 4 டிகிரி வெப்பநிலையில், கடும் குளிரில் படமாக்கப்பட்டது குறித்தும் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடியது குறித்தும் நடிகை தமன்னா வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், 4 டிகிரி வெப்பநிலையில் கடும் குளிரில் டான்சர்கள் வெற்று மார்புடன் நடனம் ஆடியதை தமன்னா பாராட்டியுள்ளார்.
ஆஜ் கி ராத் கடந்த ஆண்டு டிசம்பரில் படமாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, தமன்னா பாட்டியா ஸ்ட்ரீ 2 படத்தின் செட்களில் இருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு குட்டி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இந்த பாடல் தனது பிறந்தநாளான டிசம்பர் 21-ம் தேதி படமாக்கப்பட்டது என்பதை அவர் வெளிப்படுத்தினார். மேலும், அன்று எப்படி குளிராக இருந்தது என்று கூறியுள்ளார். நிச்சயமாக, செட்டில் கேக் இருந்தது, ஆனால், ஐஸ்கிரீமாக மாறியது. ஆனால், கொண்டாட்டம் நிற்கவில்லை. அதைத் தொடர்ந்து ஸ்ட்ரீ 2 செட்டுக்கு மற்றொரு கேக் வந்தது. இரண்டாவது கேக்கை ராஜ்குமார் ராவ் வெட்டினார்.
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வோ ராத் முதல் ஆஜ் கி ராத் வரை. வானிலையால் மிகவும் குளிரானது, ஆனால், அனைவரின் அன்பினால் மிகவும் சூடாக இருக்கிறது. அது எனது சிறந்த பிறந்தநாளில் ஒன்று. Stree2 இலிருந்து Aaj Ki Raat மீது உங்கள் அன்பைப் பொழிந்து கொண்டே இருங்கள்.” என்று தமன்னா பதிவிட்டுள்ளார்.
ஆஜ் கி ராத் பாடலை மதுபந்தி பாக்சி மற்றும் திவ்யா குமார் பாடியுள்ளனர். அமிதாப் பட்டாச்சார்யாவின் உற்சாகமான பாடல் வரிகள் சச்சின் சங்க்வி மற்றும் ஜிகர் சரையா ஆகியோரின் இசையமைப்பில் வெளியானது. நீங்கள் ஆத் கி ராத் பாடலைப் பார்க்கவில்லை என்றால், கீழே உள்ள அந்த பாடலின் வீடியோவைப் பாருங்கள்:
ஸ்ட்ரீ 2 திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியகி பெரும் வெற்றி பெற்ற ஸ்ட்ரீ முதல் பாகத்தின் தொடர்ச்சி. இந்தப் படம் தினேஷ் விஜனின் பிரபலமான திகில்-நகைச்சுவை படத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ட்ரீ 2 ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“