New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/23/QgFAHffvRbDXSVF8OTz0.jpg)
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கோடைகாலத்திற்கு ஏற்றதாகத் தோன்றும் ஒரு அழகான இளஞ்சிவப்பு பூச் சேலையை நடிகை தமன்னா பாட்டியா அணிதிருப்பது அவரை பாரம்பரியமாக ஸ்டைலாக காட்டுகிறது. இளஞ்சிவப்பு நிற சேலையில் ஸ்டைலாக கலக்கும் தமன்னா போட்டோ இன்ஸ்டாவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
உயர் பளபளப்பான ஆடையை கைவிட்ட தமன்னா, அற்புதமான பூ போட்ட இளஞ்சிவப்பு நிற சேலையில் கோடைக்காலத்திற்கு ஏற்ற சேலை அணிந்துள்ளார். சேலையின் இளஞ்சிவப்பு நிறம் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக அழகாக உள்ளது. கோடைகாலத்திற்கு அலமாரியில் உங்களுக்கும் இதுபோன்ற ஒரு சேலை தேவை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இந்த இளஞ்சிவப்பு நிற சேலை தமன்னாவின் தோற்றத்திற்கு கூடுதல் நேர்த்தியையும் அழகையையும் கூட்டுகிறது. இரண்டு அடுக்கு முத்து சோக்கர் மற்றும் நேர்த்தியான ஸ்டட்டுகள் அவருடைய தோற்றத்தை நிறைவாக்கியுள்ளது. ஒப்பனைக்கு, தமன்னா ரோஜா கன்னங்கள், பளபளப்பான லிப்ஸ் மற்றும் மெல்லிய கண் இமைகள் கொண்ட குறைந்தபட்ச ஸ்னோ கவர்ச்சியுடன் உள்ளார். ஒரு தொழில்முறை நிபுணரைப் போல அவருடைய பாரம்பரிய ஸ்டைலில், பூ போட்ட இளஞ்சிவப்பு நிற சேலை அவரை மேலும் அழகாக காட்டுகிறது.
இளஞ்சிவப்பு நிற தேவதையாக தமன்னா ஸ்டைலாக கலக்கும் இந்த புகைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண் இமைக்க மறக்க வைத்து வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.