தடை ஏதும் இல்லாமல் வெளியான தமன்னாவின் ’பெட்ரோமாக்ஸ்’!

'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா' என்ற படத் தலைப்பை 2016-ம் ஆண்டே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா' என்ற படத் தலைப்பை 2016-ம் ஆண்டே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Petromax Movie, Tamannaah bhatia

Petromax Movie, Tamannaah bhatia

Tamannaah Bhatia: நடிகை தமன்னா நடித்துள்ள 'பெட்ரோமாக்ஸ்' படத்துக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், வரும் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதனால் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

Advertisment

நடிகை தமன்னா நடிகர் யோகிபாபு நடித்து ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள படம் பெட்ரோமாக்ஸ். ஈகிள்ஸ் ஐ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், நாளை திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி விஜய் ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா' என்ற படத் தலைப்பை 2016-ம் ஆண்டே தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

தனது படத்தலைப்பை போல உள்ள 'பெட்ரோமாக்ஸ்' படத்தை வெளியிட்டால் தனக்கு இழப்பு ஏற்படும் எனவும் இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறும்படி மத்திய தணிக்கை வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

பெட்ரோமாக்ஸ் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், இருப்பினும் படத்தை நாளை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டி வருவதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனால் நாளை படம் வெளியாவதில் எந்த இடையூறும் இல்லை.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: