இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா விஜய் வர்மாவுடன் தனது உறவு குறித்து விளக்கம் அளித்துள்ளது பெரும் வைரலாக பரவி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக தமிழில் நடித்த பெட்டர்மேக்ஸ் திரைப்படம் அவருக்கு கைக்கொடுக்காத நிலையில், அடுத்து விஷாலுடன் ஆக்ஷன் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் இந்தியில் நடித்துள்ள ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரி 2 ஆகிய 2 படங்களும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும், தெலுங்கில் போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதை உறுதி செய்த நடிகை தமன்னா, தனது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் விஜய் வர்மாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸூடனான (indianexpress.com) உரையாடலில் பேசிய தமன்னா, தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும்போதும், அவர்களுக்கு இடையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும்போதும், மீடியா போன்ற சில ஆய்வுகளால் ஒரு தடுப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால் அதை பற்றி யோசிக்காமல் மகிழ்ச்சியாக இருப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். எனக்கு கிடைத்தது இப்போது என்னிடம் இருப்பது மிகவும் வசதியாக அனுபவம். நான் கண்ணாடியைப் பார்த்து எனக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கொள்கிறேன்.
இது போன்ற அன்பு என்னை எப்போதும் தொந்தரவு செய்யாது. என் பெற்றோர் என்ன நினைப்பார்கள் என்று முன்பு நான் கவலைப்படுவேன். ஆனால் அப்போது நான் பரிணாமம் அடைந்ததைப் போலவே, அவர்களும் மாறியுள்ளனர். நான் அதை ஒரு சாதனையாக பார்க்கிறேன். இன்று எனக்கு நெருங்கமானவர்களின் உடல்நலக்குறைவு செய்தியை தவிர, வேறு எதுவும் என் மகிழ்ச்சியைப் பாதிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் வர்மாவுடனான பரபரப்பு செய்திகள் குறித்து பேசிய தமன்னா, இது சுவாரஸ்யமானது என்று எனக்குத் தெரியும். மக்கள் இது பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள். நாம் பார்த்து வளர்ந்த சினிமா, காதல் எப்படி தன்னலமற்றது என்பதையே நான் அதேபோல் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டால், வேறு யாரையும் உங்களால் மகிழ்விக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை இன்று, தங்களுக்குத் தேவையானதைக் கண்டறிய ஒருவர் பயன்படுத்தக்கூடிய பல வழிகள் உள்ளன. அந்த வகையில் விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“