ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்ட்ரீ 2' திரைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Advertisment
இதை இன்னும் அதிகரிக்க ஆஜ் கி ராத் பாடலில் தமன்னா காவாலா ஸ்டைலில் நடனமாடிய பாடலை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.
ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஸ்ட்ரீ' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, தற்போது இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
Advertisment
Advertisement
இதனிடையே, ஆஜ் கி ராத் பாடலில், தமன்னாவின் நடனத்தை கண்டு ரசிகர்கள் பரவசமடைந்த நிலையில், படத்தின் இயக்குனர் அமர் கௌசிக் கேமியோ தோற்றத்தையும் பலர் பேசினர்.
ஆஜ் கி ராத் பாடலை மதுபந்தி பாக்சி, திவ்யா குமார் ஆகியோர் பாடியுள்ளனர், சச்சின்-ஜிகர் இசையமைத்துள்ளனர். பாடலின் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“