மருத்துவர்களின் அன்பு, அர்ப்பணிப்பு… போட்டோ வெளியிட்டு உருகிய தமன்னா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், தனக்கு சிகிசை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை சந்தித்து உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

By: October 17, 2020, 8:52:52 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், தனக்கு சிகிசை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை சந்தித்து உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவான நடிகை தமன்னாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தமன்னா இரண்டு நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து, அவர் தனது உடல் வலிமையை மீட்டெடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், நடிகை தமன்னா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தமன்னா அவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர்களைப் புகழ்ந்துள்ளார்.

இது குறித்து தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நான் எந்தளவுக்கு நன்றியுள்ளவள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மருத்துவமனையில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன். பலவீனமாக இருந்தேன். நன் மிகவும் பயந்தேன். ஆனால், நான் சௌகரியமாக இருக்கச் செய்தார்கள். அவர்கள் எனக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதை உறுதி செய்தார்கள். அவர்களுடைய அன்பு, கருணை, நேர்மையான அக்கறை எல்லாவற்றையும் சிறப்பாக ஆக்கியது” என்று உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை தமன்னா தனக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி கூறி புகைப்படங்களை பகிர்ந்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் அவருடைய நன்றி மறவாத நல்ல குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamannaah bhatia thanked to doctors and nurses after covid 19 recovery photos goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X