/tamil-ie/media/media_files/uploads/2019/08/Tamannaah-Bhatia-Photos.jpg)
Tamannaah Bhatia
Tamannaah Bhatia: சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ’ஆக்ஷன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. தெலுங்கில் இவர் நடித்த ‘தட் இஸ் மகாலட்சுமி’ திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதோடு இந்தியில் நவாசுதீன் சித்திக்குடன் போலே சுடியன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது தனது டிஜிட்டல் அறிமுகத்தை ஒரு வெப் சிரீஸின் மூலம் தொடங்கியிருக்கிறார் தமன்னா. விகடன் குழுமம் தயாரிக்கும் இந்த வெப் சிரீஸ், ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக வெளியிடப்படும். இந்தத் தொடரை ராட்சசன் பட இயக்குநர் ராம்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்த ராம் சுப்பிரமணியன் இயக்கி வருகிறார்.
இந்த வெப் சிரீஸுக்கு ‘த நவம்பர் ஸ்டோரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் ஷெட்யூல் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தமன்னா இதனை உறுதிப் படுத்தியிருக்கிறார். 'த நவம்பர் ஸ்டோரி’ வெப் சிரீஸில் ஜி.எம்.குமாரின் மகளாக நடிக்கும் தமன்னா, ஒரு குற்றம் சமப்ந்தம்பட்ட சூழலிலிருந்து தன்னை எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறார் என்பது தான் கதையாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.