”ரஜினியும் கமலும் எனக்கு கடவுள் போன்றவர்கள்” – தமன்னா!

Rajinikanth - Kamal Haasan: நம்மால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என இருவரும் விருப்பப்பட்டு அரசியல் பாதைக்கு வந்துள்ளனர்.

By: November 25, 2019, 4:14:30 PM

Tamannaah Bhatia on Rajini-Kamal : திருச்சியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா கலந்துக் கொண்டார்.

அப்போது, ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்களே, அவர்களுடன் நடிக்க தயாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு, “அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார் தான் மாட்டேன் என்பார்கள்? ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

அவர்களைப் போல அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்றபோது, “அரசியலுக்கு வருவதென்றால் அதற்கு வேறுமாதிரியான பொறுப்பு வேண்டும். நம்மால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என இருவரும் விருப்பப்பட்டு அரசியல் பாதைக்கு வந்துள்ளனர். மேலும் அவர்களை பற்றி மக்களிடம் நல்ல எண்ணங்கள் இருந்து கொண்டே உள்ளது. எனவே, அவர்கள் இருவரும் மக்களுக்கு நல்ல சேவை செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

பின்னர் திருமணம் குறித்த கேள்விக்கு, நல்ல பையன் கிடைத்தால் விரைவில் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும், ஒரு வேளை நீங்களே பார்த்துக் கொடுத்தால், நான் அதற்கு தயார் என்றும் கூறினார் தமன்னா.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamannaah rajinikanth kamal haasan political entry

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X