New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tamannah-Lust-Stories.jpg)
லஸ்ட் ஸ்டோரிஸ் தமன்னா
காவாலா பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை.
லஸ்ட் ஸ்டோரிஸ் தமன்னா
ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் முதல் பாடலானா காவாலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்த பாடல் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்திர் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை. மேலும் இந்த பாடலில் கேமியோவில் ரஜினிகாந்த் தோன்றியுள்ள நிலையில், தமன்னா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் மற்றும் தமன்னாவின் நடனம் இணையத்தில் வைப் ஆகி வரும் நிலையில், இந்த பாடல் குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
Competition has never looked this cute 😍😍😍 https://t.co/UO4Xm2PJFK
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 8, 2023
இதனை உறுதி செய்யும் வகையில் காவாலா பாடலுக்கு ஒரு குழந்தை நடனமாடும் வீடியோ பதிவு ஒன்ற தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குழந்தைக்கு கூட தமன்னாவின் நடனம் தாகத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.