Biggboss Season 5 Update In tamil : விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர் வருணுக்கு முத்தம் கொடுத்தது குறித்து அக்ஷரா ரெட்டி விக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். மேலும் தற்போது டிக்கெட் டூ ஃபைனலே சுற்று நடைபெற்று வருகிறது. இதில் பணத்தை எடுத்துக்கொண்டு யார் வெளியேறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.
பிக்பாஸ நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனில் ஏதாவவது ஒரு சர்ச்சை பெரிதாக வெடித்து வரும் இந்த சர்ச்சை காரணமாக அந்தந்த எபிசோட்டுடன் சேர்த்து அடுத்து வரும் பல எபிசோடுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும். மேலும் இந்த சர்ச்சையும் நெட்டிசன்கள் மத்தியில் புயலை கிளப்பும் வகையில் வைராகி வருவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இந்த சீசனில் பல சர்ச்சைகள் வெடித்தாலும் வருண் மற்றும் அக்ஷரா குறித்த சர்ச்சைக்கு விளக்கம் கிடைத்துள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் முத்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த முத்த சர்ச்சைக்கு பெரும்பாலும் யாரும விளக்கம் அளித்ததில்லை. அதேபோல் 5-வது சீசனிலும் முத்த சர்ச்சை பெரிய வைரலாக பரவி வருகிறது. இதில் முதல் சர்ச்சையாக வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அமீர் பாவனி பின்னால் சுற்றியது, அவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவருக்கு ஆறுதல் சொல்வது போல் அவருக்கு முத்தம் கொடுத்தது வைரலாக பரவியது.
இந்த முத்த சர்ச்சைக்கு ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வந்த நிலையில், இது குறித்து இருவர் தரப்பிலும் இருந்து எவ்விதம விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதன்பிறகு பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான பல டாஸ்க்கள் காரணமாக இந்த முத்த சர்ச்சை காணாமல் போய்விட்டது. அதன்பிறகு கயிறு இழுக்கும் டாஸ்கின்போது நடிகர் வருணின் தோல்லில் சாய்ந்துகொண்டு தூங்கிய அக்ஷரா எழுந்து செல்லும்போது வருணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றது வைரலானது.
தற்போது வருண் மற்றும் அக்ஷரா இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், தான் வருணுக்கு முத்தம்கொடுத்தது குறித்து அக்ஷரா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் பல கேமராக்கள் உள்ளது. அதனால் யாரும் கீழ்த்தனமான வேலைகளை செய்துவிட முடியாது. தான் எப்போதும் காலையில் எழுந்து தனக்கு பிடித்தவர்களிடம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம்தான். அனு அண்ணாச்சி, சின்னப்பபொண்ணு, தாமரை என்று பலர் இருக்கிறார்கள். அன்றும் அதுபோலத்தான் நான் குட் மார்னிங் சொல்லி வருண் தலையில் முத்தம் கொடுத்தேன்.
அதுவும் அவர் தலையில் கட்டியிருந்த ஸ்கர்ட்மீதுதான் முத்தம் கொத்தேன். ஆனால் அது இந்த அளவிற்கு பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் இல்லாமல் பாவனி மற்றும் அமீர் நடந்துகொண்டது வெளியே வந்தபிறகுதான் எனக்கு தெரியும் ஆனால் எந்த மாதிரி சூழலில் நடந்தது என்று எனக்கு தெரியவில்லைஃ பல நேரங்களில் உள்ளே நடப்பது ஒன்றாக இருப்பது வெளியே வேறு மாதிரி காட்டப்படுகிறது. அது மாதிரிகூட ஏதாவது செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.