தவணை கட்டாத ரவி மோகன்... உல்லாச பங்களா ஜப்தி; நோட்டீஸ் அனுப்பிய பேங்க்!

நடிகர் ரவி மோகன் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில், அவரின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் ரவி மோகன் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில், அவரின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Jayam ravi News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகன், படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராத நிலையில், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மனு தாக்கல் செய்யுமாறு பட தயாரிப்பு நிறவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து தனது பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார். தற்போது பராசக்தி படத்தில் நடித்து வரும் இவர், தான் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் இயக்குனராகவும் அறிமுகமாக ரவி மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்சாக வாங்கிய ரூ. 6 கோடி பணத்தை திருப்பி செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகன் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில், அவரின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனா பாலச்சந்திரன், சென்னை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில்,எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட 2 படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு ரூ. 15 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ.6 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் அவர் நடித்ததால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டோம்.

Advertisment
Advertisements

அவர் எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை திருப்பித்தரவில்லை. அதே சமயம், ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக படம் ஒன்றை தயாரித்து வருகிறார். எனவே, எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாணையில் இரு தரப்ப வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி அப்துல் குத்தூஸ் ரூ.6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடிகர் ரவி மோகன், சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத நிலையில், எங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.6 கோடி பணத்திற்கக. அவரது சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என நிறுவனத்தின தரப்பில் கோரப்பட்டது.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொணட நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரவி மோகனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, உத்தரவிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், காதில் விழுந்த தகவல்- ஜெயம் ரவி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். கடந்த பல மாதங்களாக அந்த வீட்டிற்கு செல்லாமல் இருந்த அவர், பேங்க் தவணையையும் செலுத்தாமலிருந்தார். நாளை காலை சுமார் 10.30 மணிக்கு பேங்க் நிர்வாகம் அந்த வீட்டை ஜப்தி செய்வதாக நோட்டீஸ் ஒட்டப்போகிறதாம் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: