டேய் சண்டைக்கு வாங்கடா... பஸ் டிரைவர், கண்டெக்டரிடம் கோபமான கவுண்டமணி; புது கார் வாங்கியதால் நடந்த சம்பவம்!
கவுண்டமணி புதிதாக ஒரு கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது பஸ் அவர் கார் மீது மோதியுள்ளது. பஸ் டிரைவர் பயத்தில் இருந்தபோது கவுண்டமணியை பார்த்தவுடன் அண்ணே நீங்களா என்று எப்படி இருக்கீங்க என்று விசாரித்துள்ளார்.
கவுண்டமணி புதிதாக ஒரு கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது பஸ் அவர் கார் மீது மோதியுள்ளது. பஸ் டிரைவர் பயத்தில் இருந்தபோது கவுண்டமணியை பார்த்தவுடன் அண்ணே நீங்களா என்று எப்படி இருக்கீங்க என்று விசாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் போன இயக்குனர் சுந்தர்.சி அவரது படங்களில் காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. தொடக்கத்தில் செந்தில், கவுண்டமணி, அதன்பிறகு வடிவேலு, விவேக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என பல காமெடி நடிகர்களை வைத்து படம் இயக்கிய அவர். கவுண்டமணியுடனான ஒரு நிகழ்வை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Advertisment
1995-ம் ஆண்டு வெளியான முறை மாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர்.சி. ஜெயராம் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். மனோரமா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது. இதனைத் தொடர்ந்து, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் சுந்தர்.சி.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அருணாச்சலம் படத்தை இயக்கிய சுந்தர்.சி 1999-ம் ஆண்டு உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தை இயக்கியிருந்தார். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக், 3-வது முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த இந்த படம் இன்றும் காமெடிக்கு ஒரு முக்கிய படமாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணி செய்யும் ஒவ்வொரு காமெடியும் ஒவ்வொரு ரகமாக இருக்கும்.
படத்தின் ஒரு காட்சியில், கார்த்திக்கு வேண்டா வெறுப்பாக பெண் பார்க்க போகும்போது, அந்த கல்யாணத்தை நிறுத்த கவுண்டமணி பல வழிகளில் முயற்சி செய்வார். அப்போது பெண் வீட்டார்களிடம் வம்பு இழுக்க வேண்டும் என்று ஊமை ஒருவரை அடித்துவிடுவார். இப்படி போய்க்கொண்டே இருக்க, சாப்பாட்டில் கல்லு இருக்கு என்று பெரிய செங்கல்லை எடுத்து காட்டுவார். ஆனால் பெண் வீட்டார்கள் இவரின் எந்த பிரச்னையையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அப்போது இவர் எவனாவது சண்டைக்கு வாங்கடா என்று கேட்பார்.
Advertisment
Advertisements
உண்மையில் இந்த சம்பவம் கவுண்டமணியின் ரியல் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சுந்தர்.சி கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துபோது ஒருநாள் கவுண்டமணி அண்ணன் கோபமாக ஷூட்டிங் வந்தார். அப்போது என்ன ஆச்சு என்று விசாரித்தபோது, அவர் புதிதாக ஒரு கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது பஸ் அவர் கார் மீது மோதியுள்ளது. பஸ் டிரைவர் பயத்தில் இருந்தபோது கவுண்டமணியை பார்த்தவுடன் அண்ணே நீங்களா என்று எப்படி இருக்கீங்க என்று விசாரித்துள்ளார்.
கோபத்தில் இருக்கும் கவுண்டமணி, ஏன்யா இப்படி பண்ண என்று கேட்க, அய்யயோ படத்தில் வருவது மாதிரியே கோபப்படுறீங்களே என்று பேசியுள்ளார். என்ன இப்படி பண்றாங்க என்று கேட்டு, கண்டெக்டரிடம் இப்படி காரில் இடிச்சிட்டீங்களே என்று சொல்ல, கவுண்டமணி அண்ணே எங்க உங்க கூட செந்தில் வரலையா என்று கேட்டுள்ளார். அதோ கோபத்துடன் ஸ்பாட்டுக்கு வந்த அவர் பாருப்பா சண்டைக்கு வரமாட்ரானுங்க என்று கூறியுள்ளார். இந்த காட்சிதான் அங்கே படமாக்கப்பட்டது என்று சுந்தர்.சி கூறியுள்ளார்.