scorecardresearch

நடிகை த்ரிஷா காயம், விஜய் அஜித்தால் பின்வாங்கிய பிரபாஸ்… டாப் 5 சினிமா செய்திகள்

காசியை புதுப்பித்துள்ள பணிகளை பார்த்து பிரதமருக்கு நன்றி சொல்ல நினைத்தேன். அதை செய்தேன். அதற்கு பிரதமர் பதில் அளித்தது மேலும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

நடிகை த்ரிஷா காயம், விஜய் அஜித்தால் பின்வாங்கிய பிரபாஸ்… டாப் 5 சினிமா செய்திகள்

நடிகை த்ரிஷா காயம்

பொன்னியின் சொல்வன் படத்தின் மூலம் மீண்டும் பிஸியாகியுள்ள நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள த்ரிஷா, தனது பதிவில், சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டதாக குறியுள்ளார்.  மேலும் கால்கட்டு தொடர்பாக த்ரிஷா தரப்பு வெளியிட்டுள்ள பதிவில்,”திரிஷாவுக்கு ஏற்கனவே காலில் சிறிய காயம் இருந்தது. தற்போது அதில் வலி அதிகமாகி காலில் பெரிய வீக்கம் ஏற்பட்டது. இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டு போட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

காதல் திருமணம் செய்துகொள்வேன் – நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், சென்னை மாத்தூரில், மக்கள் நல இயக்கம் ஏற்பாடு செய்த 10 ஏழை ஜோடி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். திருமணத்திற்கு பின் பேசிய அவர்,  ‘மனதில் என்ன தோன்றுகிறதோ அதை சொல்வேன். காசியை புதுப்பித்துள்ள பணிகளை பார்த்து பிரதமருக்கு நன்றி சொல்ல நினைத்தேன். அதை செய்தேன். அதற்கு பிரதமர் பதில் அளித்தது மேலும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இதில் அரசியல் எதுவும் இல்லை. எனக்கு திருமணம் நடக்கும். எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம்தான் நடக்கும். நடிகர் சங்கத்தில் இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி வந்து விட்டோம். நாங்கள் நடிகர் சங்க கட்டிட வேலைகளை தொடங்கி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

கமல் பிறந்த நாளில இந்தியன் 2 புதிய போஸ்டர்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இன்று கமல்ஹாசன் 68 வது பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளிட்ட இயக்குனர் ஷங்கர், ‘நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

வசூல் வேட்டையில் சர்தார்

தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ந் தேதி வெளியான படம் சர்தார். கார்த்தி இடை்டை வேடங்களில் கலக்கியுள்ள இந்த படம் தண்ணீர் பாட்டில் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சர்தார் தற்போதுவரை, 100 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு மற்றும் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பின்வாங்கிய பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அதன்பிறகு ஒரு பெரிய வெற்றிப்படத்திற்காக முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக இவ நடிப்பில் ராமயனத்தை அடிப்படையாக வைத்து அதிபுருஷ் என்ற படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழ திட்டமிட்டிருந்த நிலையில், பொங்கல் தினத்தில் தமிழில் துணிவு, வாரிசு என அஜித் விஜய் படங்கள் வெளியாவதால் அதிபுருஷ் அடுத்த வருடம் ஜூன் 16-ந் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tami cinema pongal release thunivu and varisu athibursh postponed