அம்மா நடிகையுடன் டென்னிஸ் விளையாடிய சீரியல் ஹீரோ: அந்தக் கேட்ச் எதற்கு பாஸ்?!

Baakiyalakshmi Serial actress ruba sree plays tennis with Actor Ezhil and friends: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷால், அவருக்கு அம்மாவாக நடிக்கும் ரூபா ஸ்ரீவுடன் டென்னிஸ் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

Tami tv serial news in tamil Baakiyalakshmi Serial actress ruba sree plays tennis with Actor Ezhil and friends

Tami tv serial news in tamil: தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கடந்த சில மாதங்களாகவே. சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் கதைக்களம் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தலைவி தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து எப்படி தொடர்ந்து போராடுகிறார் என்பதையும் அழகாக காட்சிப் படுத்துகிறது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், அதன் துவக்க காலத்தில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போதைய வாரங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட முன்னணி சீரியல்களுள் ஒன்றாக உள்ளது.

இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஷால் சீரியலில் நடிக்கும் காட்சிகளை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த பதிவுகளுக்கு அவரது ரசிகர்ளும் லைக்ஸ் மழை பொழிவார்கள்.

விஷால் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் ரூபா ஸ்ரீவுடன் டென்னிஸ் விளையாடுகிறார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டிய வண்ணம் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tami tv serial news in tamil baakiyalakshmi serial actress ruba sree plays tennis with actor ezhil and friends

Next Story
இவ்ளோ மாற்றமா? செம்பருத்தி சீரியலில் லேட்டஸ்ட் என்ட்ரி இந்த சீனியர் நடிகைதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com