சமீப காலமாக தமிழ் சின்னத்திரையில் சீசன் 2 சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பை தொடங்கி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே விஜய் டிவியில் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா 2 உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பானது. அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இணைந்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் இன்னும் முடிவடையாத நிலையில், சீசன் 2-க்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் நிலையில், விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதேபோல் பழைய சீரியலான பாக்கியலட்சுமியும் அவ்வப்போது முன்னிலை பெற்று வருகிறது.
இதனிடையே கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பு குறைந்த நிலையில், விரைவில் சீரியல் முடிவக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சீசன் 2-க்கான ப்ரமோ வெளியானது. இதில் மூர்த்தி தனம் மற்றும் அவர்களின் 3 மகன்களுக்கு இடையில் உள்ள உணர்ச்சிபூர்வமான பிணைப்பைச் சுற்றியுள்ள கதை என்பது தெளிவாகிறது.
ஏற்கனவே இந்த தொடரில் மூத்தி கேரக்டரில் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்துவே நடித்து வரும் நிலையில், தனம் கேரக்டரில் சுஜிதா தனுஷ்க்கு பதிலாக நடிகை நிரோஷா நடித்துள்ளது ப்ரமோவில் தெரிகிறது. இதனிடையே இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் அஜய் ரத்னம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1989-ம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அஜய் ரத்னம் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து மர்மதேசம் (விடாது கருப்பு) என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியில் அறிமுகமான இவர், பூவே உனக்காக, சத்யா 1, 2 பாரதி கண்ணம்மா, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“