தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் 20 வருடங்களுக்கு பிறகு தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அடுத்து அஜித் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், வைபவ், மகத், அஸ்வின், பிரேம்ஜி, லட்சுமி ராய், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு, 4K பதிப்பில் மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரசிகர்களைக் கவர தயாராகி வருகிறது.
இன்ஸ்பெக்டர் விநாயக் ஒரு கடத்தல்காரனைப் பிடிக்கத் தவறியதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஒரு கும்பலுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் பந்தய பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிடும் ஒரு குழுவில் இணையும் விநாயக், அவருக்கு உதவி செய்வதாக உறுதியளித்தனர். இருப்பினும், அவர் திட்டமிட்டபடி தான் அனைத்து விஷயங்கள் நடக்கும். இறுதியில் என்ன நடந்தது என்பதை க்ளைமேக்ஸ் ட்விஸ்டுடன் சொல்லியிருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு.
மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை மே 1 ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக தமிழில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் தயாராகிவிட்டனர். இருப்பினும், தற்போது திட்டமிட்டபடி மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சமீபத்திய தகவலின்படி, மங்காத்தாவின் ரீ-ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மே 1 க்கு மாறாக, வெளியீட்டிற்கு செல்ல தயாரிப்பாளர்கள் இப்போது சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். திரையரங்கு பகிர்வில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. தயாரிப்பாளர்கள் சிக்கலைத் தீர்த்து அதிகாரப்பூர்வ தேதியை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“