கலைஞர் விழா… அஜித்துடன் மோதிய ஸ்டண்ட் மாஸ்டர்: ஒரு ஃப்ளாஷ் பேக் ஸ்டோரி

Tamil Update : அஜித், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actor Ajith Speech Viral Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித்குமார் பல ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்து பேசிய வீடியோ கட்சி தற்போது இணையத்தில் வைராக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் என்றும் வசூல் நாயகனாக திகழ்பவர் நடிகர் அஜித். 90களில் வெளியாக அமராவதி படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான அஜித் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், மற்றும நேர்கொண்ட பார்வை என இரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஸ்வாசம் திரைப்படம் தேசிய விருது பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம், நாளை (ஜனவரி 13) வெளியாக இருந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துககொண்டிருக்கும் நிலையில், நடிகர் அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் எப்போதுமே தலை காட்டாத நடிகர் அஜித், தனது படத்தில் ப்ரமோஷன், பிரஸ் மீட் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. இதனால் அவரை பொதுவெளியில் காண்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 2010 பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில்திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டர். இதில் பேசிய நடிகர் அஜித், இது போன்ற அரசியல் விழாவிற்கு எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கிறார்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாம் அய்யா. எங்களை நடிக்க விடுங்கள். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக ஆக்க வேண்டாம். இதற்காக ஒரு நல்ல முடிவை எடுங்க அய்யா என்று பேசினார். அஜித்தின் இந்த தைரியமான பேச்சுக்கு விழா மேடை அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டி பாராட்டியுள்ளார். ஆனால் அஜித்தின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. அப்போது இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.   

‘இந்நிலையில், இந்த விழாவில்போது பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான ஜாக்குவார் தங்கத்துக்கும் நடிகர் அஜித்துக்கும் மோதல் ஏற்பட்டதாக ஜாக்குவார் தங்கம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கலைஞருக்காக பாராட்டு விழா நடைபெற்றபோது, நடிகர் அஜித் தமிழைப்பற்றி ஒரு மாதிரி பேசிவிட்டார். நான் அதை எதிர்த்து கேட்டேன். அப்போது அவரை சார்ந்தவர்கள் என் வீட்டை அடித்து நொருக்கிவிட்டனர்.

இதற்கு நானும் கோபப்பட்டேன். மீடியாக பரபரப்புக்கு உள்ளானது. ஆனால் நடிகர் அஜித் இது குறித்து நடிகர் சங்கத்திடம் சொல்லி இது எனக்கு தெரியமால் நடந்தது. நம்ம எல்ாேரும் நண்பர்கள் தானே என்று சொன்னார். உடனே நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். அப்போது அஜித் நஷ்டஈடு தருவதாக கூறினார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் பேசியதை வேறு மாதிரி புரிந்துகொண்டார்கள் என்று அஜித் கூறினார். அதன்பிறகு நாங்கள் சமராசம் ஆகிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor ajith speech about kalaignar karunanithi in 2010 viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express