மருத்துவமனையில் சிகிச்சை: அம்மா மகன் பாச போராட்டம்; நடிகை ஷாலினி வைரல் போட்டோ!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Ajith Shalini1

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனிடையே தனது மகன் ஆத்விக்குடன் ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

சினிமா மற்றும் பைக் ரைடிங்கில் ஆர்வம் அதிகம் இருக்கும் அஜித், அதைவிட அதிகமாக தனது குடும்பத்தின் மீது அக்கரையுடன் இருப்பவர் என்பது அவ்வப்போது அவரது மனைவி ஷாலினி வெளியிடும் புகைப்படங்களில் இருந்து தெரிகிறது. இதனிடையே சமீபத்தில் அஜர்பைஜானில் அஜித் விடா முயற்சி ஷூட்டிங்கில் இருந்தபோது, அவரது மனைவி ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மருத்தவமனையில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் அடுத்த நாள் சென்னை திரும்பினார். அதன்பிறகு மருத்துவமனையில் தனது மனைவியை சந்தித்த அஜித், மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனிடையே தற்போது ஷாலினி புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Advertisment
Advertisements

மருத்துவமனையில் இன்னும் பூரண குணமாகாத ஷாலினி, மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், மகன் ஆத்விக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆத்விக் ஷாலினியின் நெற்றியில் முத்தமிடுகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகை ஷாலினி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டிக்கொண்டு அவரின் பதிவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Shalini Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: