scorecardresearch

ரேஸ் பைக்கில் பறக்கும் அஜித்: உலக டூர் லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ்

நேபாளத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித் பூடான் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.

Ajith Kumar
உலக டூர் சுற்றுப்பயணத்தில் நடிகர் அஜித்

உலக டூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித் தற்போது நேபாளம் பூடான் நாட்டில் பயணத்தை முடித்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட பயணத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவார் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவருமான அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் திரைக்கதை விவாதம் முடிந்து கடந்த மே 1-ந் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விடா முயற்சி படத்தில் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் உலக டூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஏற்கனவே இந்தியா முழுவதும் தனது இரு சக்கரவாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் தற்போது உலக டூர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதில் முதற்கட்டமாக நேபாளத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித் பூடான் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். இந்த உலக டூர் சுற்றுப்பயணத்தின் அடுத்தக்கட்ட பயணம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், சவாலான இடங்களில் பயணம் செய்து தீவிர தட்ப வெட்ப நிலையை எதிர்கொண்ட அஜித் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்துள்ளார். தற்போது நேபாளம் மற்றும் பூடானில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அஜித் உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்ட பயணத்தை நவம்பர் 2023 இல் தொடங்குவார் என்று கூறியுள்ளார்.

இதனிடையே அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும், நடிகர் நடிகைககள் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor ajith world tour next schedule start coming november

Best of Express