/indian-express-tamil/media/media_files/1LO9ro3TIU7MawG4JI6C.jpg)
பைக் ரைடில் அஜித்குமார்
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வந்த நடிகர் அஜித், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் தனது பைக் ட்ரிப்பை தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு விளையாட்டு வீரராகவும் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் டைட்டில் வெளியிடப்பட்டது. குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தற்போது அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேசத்தில் தனது சிறிய பைக்கில் பைக்கில் பயணம் செய்து வருகிறார்.
இது குறித்து அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், ஃபிட் அண்ட் அக்லி ஏ.கே. மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார் ("Fit And Agile !!! AK back on Track (sic)" என்று பதிவிட்டுள்ளார். அஜித் கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சாலைப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.அஜித் இந்த பயணத்தை முடித்துவிட்டு அஜித் திரும்பியதும், 'விடா முயற்சி' படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Fit And Agile !!! AK back on Track #Ajithkumarpic.twitter.com/gvLYjnMony
— Suresh Chandra (@SureshChandraa) March 19, 2024
மேலும் அஜித் சமீபத்தில், அவர் ஒரு மோட்டார் சைக்கிள் டூரிங் நிறுவனத்தைத் தொடங்கி தொழில்முனைவோராக மாறியுள்ளார். விடா முயற்சி படம் முடிந்தவுடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ள நிலையில், இந்த படம் 2025 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.