துபாயில் நடைபெறும் 24எச் சிரீஸ் கார் ரேஸ் போட்டியில் தனது அணியுடன் களமிறங்கியுள்ள நடிகர் அஜித் ஒரு போட்டியில் களமிறங்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாயில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஜித் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே தற்போது துபாய் கார் ரேஸ்க்காக தயாராகி வரும் அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு நடிப்பில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துபாய் கார் ரேஸ் முடியும்வரை அடுத்த 9 மாதங்களுக்கு நடிப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ள அஜித், கார் ரேஸின் முதல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒரு அணியில் மட்டும் ரேஸராக அஜித்குமார் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது போட்டியில் இருந்து விலகியுள்ள அஜித், அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் துபாய் ரேஸில் ஒரு போட்டியில் இருந்து மட்டும் விலகும் அஜித் மற்றொரு போடடியில் களமிறங்க உள்ளார். போர்சச் 992 கப் போட்டியில் மட்டும் அஜித் பங்கேற்கவில்லை. போர்சஸ் ஜெய்மேன் ஜி.டி4 போட்டியில், கார் ஓட்டும் வீரராக அஜித்குமார் பங்கேற்க உள்ளார். அதேபோல் துபாய் கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் அணி தொடர்ந்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“