உங்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம்... தலைவர் நீங்கள் தான் : ரஜினிக்கு அமிதாப் பதில்

மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட உருக்கமான பதிவுக்கு அமிதாப் பச்சன் தற்போது பதில் அளித்துள்ளார்.

மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட உருக்கமான பதிவுக்கு அமிதாப் பச்சன் தற்போது பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mitabh and rajinikanth

அமிதாப் பச்சன் - ரஜனிகாந்த்

தலைவர் 170 படத்தின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட உருக்கமான பதிவுக்கு அமிதாப் பச்சன் தற்போது பதில் அளித்துள்ளார்.

Advertisment

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன்பகத் பாசில்ராணாமஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

திருவனந்தபுரம்கன்னியாகுமரிநெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த்அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள நிலையில்அமிதாப் பச்சன் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதனிடையே 33 ஆண்டுகளுக்கு பின் அமிதாப்புடன் இணைந்து நடிப்பது குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த்,

 டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள அமிதாப் பச்சன், நீங்கள் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் பெயரை பாருங்கள், அதன் தலைவர் 170. தலைவர் என்றால் தலைவர் தான். நீங்கள் தான் தலைவர். இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா மக்களே..?? உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது! உங்களுடன் மீண்டும் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்..!! என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Amitabh Bachchan Superstar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: