Advertisment
Presenting Partner
Desktop GIF

அரசியல் என்ட்ரி எப்போது? சிரித்தபடி பதில் கொடுத்த அருள்நிதி; வாய்ப்பு உண்டா?

வழக்கமாக பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும்.

author-image
WebDesk
New Update
Arul Nithi Nah

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் 2 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், டிமான்டி காலனி முதல் பாகம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தில், வி.எஃப்.எக்ஸ் பின்னணி இசை என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் நடைபெற்ற டிமான்டி காலனி 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் அருள்நிதி, அருண்பாண்டியன், முத்துகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா இயக்குநர் அஜர் ஞானமுத்து, தயாரிப்பாளர் தொழில்நுட்ப கலைஞர் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அருள்நிதி தனது அரசியல் என்ட்ரி குறித்து பேசியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  முதல் பாகத்தை தழுவி இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் வழக்கமாக பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும். இப்படத்தின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் சிறந்த பின்னனி இசையை கொடுத்து திகில் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

மேலும் வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் இப்படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது., வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் நன்றாக வருவதற்கு தான் நாட்கள் அதிகம் எடுத்து கொண்டோம். ஆகஸ்ட் 15-ந் தேதி மேலும் ஒரு சில படங்கள் வெளியாகிறது. வேண்டுமென்றே அந்த நாளில் இந்த படத்தை வெளியிடவில்லை. அந்நாளில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும். தற்போது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. 2062"ல் அது குறித்து யோசிக்கலாம் அப்போது நானும் உயிருடன் இருக்கமாட்டேன் நீங்களும் இருக்க மாட்டீர்கள் என சிரித்தபடிய பதிலளித்துவிட்டு சென்றார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Arulnithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment