Advertisment

குத்துச்சண்டையா? ஆணழகன் போட்டியா? அறிமுக காட்சிக்கு தயாராகும் ஆர்யா : வைரல் விடியோ

தெலுங்கு மலையாளம் தமிழ் என மாறி மாறி நடித்து வரும் ஆர்யா தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
தெலுங்கு மலையாளம் தமிழ் என மாறி மாறி நடித்து வரும் ஆர்யா தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ஆர்யா

சார்ப்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க உள்ள நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்து தனது உடலை மெருகேற்றி வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, அடுத்து பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனாலும் ஆர்யாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் சார்ப்பட்டா பரம்பரை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம், திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் தமிழ் என மாறி மாறி நடித்து வரும் ஆர்யா தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மிஸ்டர் எக்ஸ் படக்குழுவினரை டேக் செய்து ஆர்யா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், மிஸ்டர் எக்ஸ் படத்தின் அறிமுக காட்சிக்கு தயார். சீக்கிரம் ஆரம்பியுங்கள் பிரதர் மனு ஆனந்த். ஃபர்ஸ்ட் லுக் டிசர் விரைவில். பிரதமர் கவுதம் கார்த்திக் ஏற்கனவே இந்த படத்தில் அசத்தி வருகிறார்.

சரத்குமார் சார் உண்மையான மகா மனிதர். மஞ்சு வாரியார் மிஸ்டர் எக்ஸ் படத்தின் இரும்பு பெண்மணி என்று பதிவிட்டுள்ளார்.  ஆர்யாவின் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்தின் அறிமுக காட்சி குத்துச்சண்டை போட்டியா? அல்லது ஆணழகன் போட்டியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment