scorecardresearch

மனைவியுடன் தியேட்டருக்கு வந்த அஜித் பட நடிகர் : விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி

மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் பாலா

மனைவியுடன் தியேட்டருக்கு வந்த அஜித் பட நடிகர் : விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி

வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த நடிகர் பாலா பிரிந்த மனைவியுடன் இணைந்து தியேட்டரில் ஒன்றாக படம் பார்த்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு தமிழில் வெளியான அன்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோரரான இவர்,  காதல் கிசு கிசு, மஞ்சள் வெயில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காத இவர், மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

மலையாளத்தில் மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள பாலா சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் அஜித்தின் 4 தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே பாலா கடந்த 2010-ம் ஆண்டு அமிர்தா சுரேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் பரிந்தனர். அதனைத் தொடர்ந்து பாலா கடந்த ஆண்டு டாக்டர் எலிசபெத் என்பரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து இருவருமே மௌனம் காத்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பாலா நடிப்பில் வெளியான ஷபிக்குண்டே சந்தோஷம் என்ற மலையாளப்படம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை பார்க்க நடிகர் பாலா தனது 2-வது மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலா தனது 2-வது மனைவியையும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது வதந்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் பாலாவை மனைவியுடன் பார்த்த ரசிகர்கள் மீண்டும் இணைந்ததாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor bala visit theater with his wife elizabeth in kerala